இணையத்தில் நான் – பாபு நடேசன்

Babu

I’m not a poet, Not a hero, Not celebrity, Don’t have strong support but only I have a social interest.

நான் கவிஞனும் இல்லை, கதாநாயகனும் இல்லை, பிரபலமும் இல்லை, பக்க பலமும் இல்லை, சமுதாய அக்கறை மட்டும் கொண்டவன்.

இணையத்தில் என்னுடைய பக்கங்கள் | My pages on Internet

தமிழ் அறிவு கதைகள் | Tamil Arivu Kadhaikal
குழந்தை வளர்ப்பு-Child Care
தமிழ் அறிவு வானொலி | Tamil Arivu Vanoli
எண்ணங்களும் வண்ணங்களும்
babunatesan.blogspot.com/
தெரியுமா?
http://theriyumaa.blogspot.in/
குழந்தையின் உணவு
http://kuzhanthaiyinunavu.blogspot.in/

 

Advertisements

வலி

நமக்கு நெருக்கமானோர் நம்முடன்
பேசாத போது ஏற்படும் வலியை விட

அவர்கள் மற்றவருடன் நெருக்காமாக
பேசும் போது ஏற்படும் வலி அதிகம்…

அடே தழிழா! மறத்தமிழா!!

அடே தழிழா மறத்தமிழா – மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?

உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது –

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )

முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்

கண்டுமுன் இதயம் உருகவில்லையா?

உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)

காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்

மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது

அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)

அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் – உன்னுடன்

துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?

சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்

உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)


இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!

தாய், தந்தை…

என் தாய்க்காக ………………

உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே
ஒரு துளியில் உருவாகி , உனக்குள்ளே கருவாகி
உன் இரத்தம் உணவாகி, உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோம் அம்மா
உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே ………….
பூவுன்னு பார்த்தாக்க ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு
தாய்னு பார்த்தாக்க எல்லா தாய்க்கும் ஒரே குணம் தான் உண்டு …

என் தந்தைக்காக

நான் துவண்ட போது என்னை துவண்டு போய் விடாதே என்று
சொன்னது ஒரு ஜீவன் ………….
நான் தோல்வி அடைந்த போது தோல்வி வெற்றியின் படிக்கட்டுகள் என்று சொன்னது ஒரு ஜீவன் …………..
நான் சோர்வடைந்த போது எனக்கு உற்சாகம்
சொன்னது ஒரு ஜீவன் ………..
நான் பயந்த போது எனக்கு தைரியம்
சொன்னது ஒரு ஜீவன் ………….
எனக்கு பல நல்வார்த்தைகள் சொல்லி தன்னம்பிக்கை
வளர்த்தது ஒரு ஜீவன் ………….

பிப்ரவரி 2009

அன்பே

அன்பே – நான் நினைவோடு
வாழ்ந்த நாட்களை விட – உன்
சுயநினைவோடு வாழ்ந்த நாட்களே அதிகம்.

*******************************************************************
உன்னை கண்ட பிறகு …..

வாசலில் கோலம் போடும்
பெண்களை பார்த்திருக்கிறேன்
கண்களால் கோலம் போடுவதை
இன்றுதானே பார்க்கிறேன்
உன்னை கண்ட பிறகு …..

*******************************************************************
நட்பு என்பது…  காதல் என்பது…

நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு
அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை

பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்
பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்

*******************************************************************
நட்பு

புன்னகையை மட்டும்
வீசிவிட்டு எப்படி பேசமுடிகிறது
இந்த பெண்களால்
நட்பாய்….

*******************************************************************

இளைஞனே பயந்தால் பூமியும்
உன் தலைக்கு மேல் தெரியும்
முயற்சித்தால் வானமும்
உன் காலுக்கு கீழ் தெரியும்
விடிந்தால் கதிரவன் வருவதும்
மாலை வந்தால் சந்திரன் வருவதும் சகஜமே
அதே போல் ஒவ்வொருவர் வாழ்விலும்
வெற்றியும் தோல்வியும் சகஜமே
தோல்வி சக்தி வெற்றி சிவம்
இரண்டையும் ஒன்றாக பாவி
வானமே உன் வசப்படும்.

*******************************************************************
பெண் சிசு கொலை

அம்மா நான் உன்னிடத்தில் தங்கம் கேட்கவில்லை
தாய்ப்பாலைத் தான் கேட்டேன் ஆனால் நீயோ எனக்கு
கல்லிப் பாலை ஊற்றினாய் அம்மா நான் அழுவது
எனக்கா இல்லை பிறக்கப் போகும் என் தங்கைக்காக

*******************************************************************
காதல்

மதங்களை காதலி
தீவிரவாதியாகதே!
ஜாதியைக் காதலி (ஆண், பெண்)
வெறிக் கொள்ளாதே!
நிறத்தைக் காதலி – அதில்
உயர்வுத் தாழ்வு காணாதே!
மண்ணைக் காதலி – அதற்காக
உறவைப் பகைக்கொள்ளாதே!
நாட்டைக் காதலி – நாட்டை
இழி நிலைக்குத் தள்ளாதே!
இயற்கையைக் காதலி – அதை
அழிக்க நினைக்காதே!
தாயைக் காதலி
காரியவாதி யாகாதே!
தந்தையைக் காதலி
பணப்பையை பார்க்காதே!
உடன்பிறப்பைக் காதலி – அவர்களால்
ஏற்படும் தீமையை நினைவில் கொள்ளாதே!
பணத்தைக் காதலி – அதுவே
வாழ்க்கை எனக் கொள்ளாதே!
மனதைக் காதலி
வெளி அழகைப் பார்க்காதே!
நல்லதைக் காதலி
தீயதை அணுகவிடாதே!
காதலை காதலி
கைவிட்டுவிடாதே!

*******************************************************************
சிந்தனை துளிகள்…

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

*******************************************************************
பாபு நடேசன்..

டிசம்பர் 2008

தெருவில் கண்டவளை நினைத்து கொண்டு…
கருவில் சுமந்தவளை மறந்து விடாதே…….!!!

*******************************************************************

எல்லா குற்றங்களையும் மண்ணிக்கும் ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம்………!!

*******************************************************************

பெண்ணே என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,
என் உயிரை தவிர………
ஏன்யென்றால் என்னை கருவில் சுமந்தவளை
நான் கல்லறை வரையாவது சுமக்க வேண்டும்…..!!

*******************************************************************

ஒரு பெண்ணை உன்னிடம் அதிகம் பேச அனுமதிகதே!!

பின் அவள் உன்னை அதிகம் பேச வைத்துவிடுவாள்!!

“தனியாக”

*******************************************************************

நட்பு!!

“நட்பு என்பது கண்களை விட்டு பிரிந்து
செல்லும் கண்ணீர் துளிகள் அல்ல!
அது கண்களோடு இருக்கும் கருவிழிகள்!!”

ஈரம்!!

****************************************************

அன்பு நெஞ்சங்கள் அருகில் இருந்தாலென்ன…..!
தொலைவில் இருந்தாலென்ன……!
அழியாத நினைவுகள் இருந்தாலே போதும்………!

****************************************************

உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்….
நீ மழையில் நனைந்துகொண்டே அழுதாலும்…..

****************************************************

பாசம் என்று நினைத்துதான் பழகினேன்….
பின்பு தான் தெரிந்தது நீ என் சுவாசமென்று!!

****************************************************

கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்……
கடல் அலை வந்து எடுத்து சென்றது……

அழகான முத்துக்கள் எனக்கே சொந்தம் என்று…….!!!

பாபு நடேசன்..